கூடுதல் துணை ராணுவம்; இந்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்யும்: சத்யபிரதா சாகு பேட்டி
கூடுதல் துணை ராணுவம்; இந்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்யும்: சத்யபிரதா சாகு பேட்டி
ADDED : ஏப் 14, 2024 01:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ' தேர்தல் பணிக்காக கூடுதலாக 10 கம்பெனி துறை ராணுவ படைகள் வேண்டும் என தமிழக டிஜிபி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இந்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்யும்' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தை சேர்ந்த 70 ஆயிரம் ராணுவ வீரர்கள் தபால் மூலம் ஓட்டளிக்க உள்ளனர். ஜூன் 4ம் தேதி காலை 8 மணிக்குள் ஓட்டுச்சீட்டுகளை அனுப்ப வேண்டும். பூத் ஸ்லிப் வழங்கும் பணி 100 சதவீதம் நிறைவு அடைந்துள்ளது.
தபால் ஓட்டுகள் தொடர்பான பணிகள் ஏப்ரல் 17ம் தேதிக்குள் நிறைவு பெறும். தேர்தல் பணிக்காக கூடுதலாக 10 கம்பெனி துறை ராணுவ படைகள் வேண்டும் என டிஜிபி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இந்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

