ADDED : ஜூலை 20, 2024 02:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : வருவாய்த் துறை செயலர் அமுதாவுக்கு, முதல்வரின் முகவரி துறை சிறப்பு அதிகாரி பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழக உள்துறை செயலர் அமுதா சமீபத்தில் மாற்றப்பட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலராக நியமிக்கப்பட்டார்.
பல்வேறு சர்ச்சை கள் காரணமாக, அவர் உள்துறை செயலர் பதவியிலிருந்து மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதல்வரின் முகவரி சிறப்பு அதிகாரி பொறுப்பு, அவருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
மக்களுடன் முதல்வர், பொதுமக்கள் குறை தீர்வு திட்டங்கள் சிறப்பு அதிகாரி பொறுப்பையும், அவர் கூடுதலாக கவனிப்பார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையை, தலைமைச் செயலர் சிவ்தாஸ்மீனா வெளியிட்டுஉள்ளார்.

