ADDED : மார் 09, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மாசி மாத சுபமுகூர்த்த நாளான நாளை, பத்திரப்பதிவு மேற்கொள்ள, கூடுதல் டோக்கன் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சுபமுகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்ய, பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதை கருத்தில் வைத்து, பதிவுத்துறை சுபமுகூர்த்த நாட்களில் கூடுதல் டோக்கன் வழங்க உத்தரவிடுகிறது.
அந்த வகையில், மாசி மாதத்தில் சுபமுகூர்த்த நாளான நாளை, பத்திரப்பதிவு மேற்கொள்ள, கூடுதல் டோக்கன் வழங்கப்படும்.
இதன்படி, வழக்கமாக, 100 டோக்கன் வழங்கப்படும் சார்-பதிவாளர் அலுவலகங்களில், 150 டோக்கன்கள் வழங்கப்படும்; 200 டோக்கன் வழங்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது.