ADDED : மே 25, 2024 08:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், இலக்கியத் துறையில், இரண்டாண்டு தமிழ் முதுகலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
தமிழ் பல்கலை ஏற்புடன், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ., தமிழ் மற்றும் பிஎச்.டி., படிப்புகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடத்தப்படுகின்றன. இந்த கல்வி ஆண்டில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ., தமிழ் முதுகலை பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
அத்துடன் இலக்கியத் துறையில், இரண்டாண்டு தமிழ் முதுகலை பட்டப்படிப்புக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில் சேரும் மாணவர்களில், 15 மாணவர்களுக்கு மட்டும் மாதந்தோறும் தமிழக அரசு சார்பில், 2,000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மேலும் விபரங்களை, www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.