ADDED : மார் 04, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி ; தென் மாவட்ட விவசாய சங்கத்தினர் பங்கேற்கும் வேளாண் பட்ஜெட் தயாரிப்பு ஆலோசனை கூட்டம் திருநெல்வேலியில் நாளை (மார்ச் 6) நடக்க உள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர்.
தமிழக பட்ஜெட் கூட்டம் விரைவில் நடக்க உள்ளது. இதற்காக வேளாண் தொடர்பான திட்டங்கள் தயாரிப்பு பணியில் வேளாண் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக விவசாயிகளுடன் ஆலோசனை செய்து வருகின்றனர். தென்மாவட்ட விவசாயிகளுடனான ஆலோசனைக்கூட்டம் திருநெல்வேலியில் நாளை(மார்ச் 6)ல் மாதா மாளிகையில் நடக்கிறது.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, கரூர், புதுக்கோட்டை வேளாண், தோட்டக்கலை உள்ளிட்ட துறை அதிகாரிகள், விவசாய சங்கத்தினர் பங்கேற்க ஏற்பாடு நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.