ADDED : மே 04, 2024 12:21 AM
சென்னை:ஜே.இ.இ., மெயின்ஸ் தேர்வில், ஆகாஷ் பயிற்சி நிறுவனத்தின் மாணவர்கள், தரவரிசையில் அதிக அளவில் முன்னிலை பெற்றுள்ளனர்.
இதுகுறித்து, ஆகாஷ் நுழைவு தேர்வு பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஜே.இ.இ., மெயின் 2ம் கட்ட தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. இதில், ஆகாஷில் படித்த, 13,485 மாணவர்கள் ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களில், 1,293 மாணவர்கள், 99 'பெர்சன்டைல்' மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் ஒன்பது பேர், அகில இந்திய தரவரிசையில், முதல் 100 இடங்களிலும்; 52 பேர் முதல் 500 இடங்களிலும் இடம் பெற்றுள்ளனர்.
சான்வி ஜெயின் என்ற மாணவி, 4 ஆண்டுகள் ஆகாஷ் வகுப்பில் படித்து, இந்த தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற்று, அகில இந்திய அளவில், 34ம் இடமும், பெண்கள் பிரிவில் தேசிய அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த, சாய் திவ்யா தேஜா ரெட்டி, ரிஷி சேகர் சுக்லா ஆகியோர், அகில இந்திய அளவில், முறையே, 15, 19ம் இடங்களை பிடித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரசித் அகர்வால், அகில இந்திய அளவில், 25ம் இடம் பெற்றுள்ளார். இந்த தேர்வில், 257 பேர் 100 சதவீதம் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். 1,293 பேர் 99 பெர்சன்டைல், 5,841 பேர் 95 பெர்சன்டைல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
ஆகாஷ் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை பெற, 1800 102 2727 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும், www.aakash.ac.in என்ற இணையதளத்திலும் விபரம் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.