மார்ச் 23ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்: சத்யபிரதா சாகு பேட்டி
மார்ச் 23ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்: சத்யபிரதா சாகு பேட்டி
ADDED : மார் 21, 2024 02:58 PM

சென்னை: லோக்சபா தேர்தல் தொடர்பாக, நாளை மறுநாள் மார்ச் 23ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் அறிவித்தார். அதன்படி, வரும் ஏப்ரல் 19ம் தேதி துவங்கும், தேர்தல் ஜூன் 1ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஏப்.,19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில், '' சென்னை தலைமைச் செயலகத்தில் மார்ச் 23ம் தேதி மதியம் 12 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் லோக்சபா தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும்'' எனக் கூறினார்.

