ADDED : ஆக 28, 2024 05:53 AM

சென்னை : தமிழகம் முழுதும் உள்ள சாலைகளை மேம்படுத்த, ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் அமலில் உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், மூன்று ஆண்டுகளில், 7,966 கி.மீ., சாலைகளை அகலப்படுத்துதல், 1,841 பாலங்கள், சிறுபாலங்கள் கட்டுமான பணிகள், 14,980 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதுமட்டுமின்றி, 5,715 கி.மீ., சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டு இத்திட்டத்திற்கு, 5,000 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள 27 மாவட்டங்களில், சாலைகளை அகலப்படுத்துதல், புதுப்பித்தல், பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும், 100 கோடி முதல், 250 கோடி ரூபாய் வரை பிரித்து ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில், நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.