ADDED : மே 30, 2024 02:25 AM
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தங்களுடைய ஆட்சிக் காலத்தில், ஹிந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், பிற சிறுபான்மை சமூகத்தினர் இணக்கமாக வாழக்கூடிய நிலையை ஏற்படுத்தி காட்டியவர்கள். ஆனால், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அவர்களை அவதுாறாக பேசுகிறார். ஜெயலலிதாவை ஒரு மதத்துக்குள் அடக்கும் வகையில், இழிவான செயலை செய்து வருகிறார். அண்ணாமலை அரசியல்வாதி அல்ல; அரசியல் வியாதி; வியாபாரி.
கவர்னராக இருந்த தமிழிசை தவறான தகவலை கூறலாமா? அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான கரசேவைக்கு ஆள் அனுப்ப ஜெயலலிதா சொன்னார் என்பதை நிரூபித்தால், அரசியலை விட்டு நான் விலக தயார். 'ராமர் கோவில் கட்ட வேண்டும்;மசூதியும் இருக்க வேண்டும்' என்றுதான் ஜெயலலிதா விரும்பினார்.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள் கடத்தல், கஞ்சா புழக்கத்தில், முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதையெல்லாம் பற்றி அண்ணாமலை என்றைக்காவது பேசியிருக்கிறாரா?
ஜெயகுமார்
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்