ADDED : ஜூலை 27, 2024 07:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் சீமானும், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொண்டனர்.
கோவையில் தனியார் மருத்துவமனை தலைவரின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பா.ஜ.,மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி சீமான், பா.ம.க.,வின் அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொள்ள வந்த அண்ணமாலை, முன்வரிசையில் அமர்ந்திருந்த சீமானை நோக்கி சென்று அவரை கட்டிப்பிடித்தார். இருவரும் அன்பை பரிமாறிக்கொண்டனர். இதன் வீடியோ வெளியாகியுள்ளது.