ADDED : ஆக 20, 2024 04:21 AM
சென்னை: 'கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கையில், எவ்வித தொய்வும் ஏற்படக்கூடாது' என, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார்.
போலீசாருக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கள்ளச்சாராயம் விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தவுடன், எவ்வித தாமதமும் இன்றி, போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோர், அதன் பின்னணியில் இருக்கும் நபர்கள் குறித்தும், சட்ட விரோதமாக எத்தனால் விற்பனை நடக்கிறதா என்பது குறித்தும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
கள்ளச்சாராய ஒழிப்பில் எவ்வித தொய்வும் ஏற்படக்கூடாது. திடீர் சோதனைகள் நடத்தி, கள்ளச்சாராய ஊறல்களை அழிக்க வேண்டும். கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு எதிராக கைது நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.