ADDED : ஜூலை 24, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அரசு கல்லுாரிகளில், முதுநிலை பட்டப்படிப்புக்கான விண்ணப்ப பதிவு, வரும் 27ம் தேதி துவங்கி ஆக., 7ல் நிறைவடையும். ஆக., 10ல் தரவரிசை வெளியாகும்.
சிறப்பு பிரிவினருக்கான சேர்க்கை 13ல் துவங்கும். பொது கவுன்சிலிங், ஆக., 19 முதல் 23ம் தேதி வரை நடக்கும்.
முதலாம் ஆண்டு முதுநிலை வகுப்புகள், 28ம் தேதி துவங்கும் என, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

