தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'செட்' தேர்வுக்கு விண்ணப்ப பதிவு

'செட்' தேர்வுக்கு விண்ணப்ப பதிவு

'செட்' தேர்வுக்கு விண்ணப்ப பதிவு


ADDED : ஏப் 02, 2024 12:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2024 12:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் உள்ள அரசு உயர் கல்வி நிறுவனங்களில், உதவி பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' அல்லது தமிழக அரசின் 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழக அரசின் சார்பில், இந்த ஆண்டுக்கான செட் தேர்வை நடத்த, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் 3 முதல் 25 வரை தேர்வு நடக்க உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, https://www.msuniv.ac.in/ என்ற இணையதளத்தில் நேற்று துவங்கியது.

வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பிழைகள் ஏற்பட்டால், மே 3, 4ல், ஆன்லைன் வழியில் திருத்திக் கொள்ளலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

--------------------

* பிளஸ் 2 முடித்த மாணவர்கள், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆண்டுதோறும் இரண்டு முறை இந்த தேர்வு நடத்தப்படுகிறது. முதற்கட்ட தேர்வு ஜனவரியில் முடிந்து, தேர்வு முடிவும் வெளியாகி விட்டது. இரண்டாம் கட்ட தேர்வு, வரும் 4, 5, 6, 8, 9ம் தேதிகளில் நாடு முழுதும் நடக்கிறது. பி.ஆர்க்., படிப்புக்கான ஜே.இ.இ., தேர்வு, ஏப்., 12ல் நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்கள், https://jeemain.nta.ac.in/ என்ற இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்யுமாறு தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us