sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிரிக்கெட் மைதானமாக மாறியது அரிமளம் செட்டி ஊரணி குளம்

/

கிரிக்கெட் மைதானமாக மாறியது அரிமளம் செட்டி ஊரணி குளம்

கிரிக்கெட் மைதானமாக மாறியது அரிமளம் செட்டி ஊரணி குளம்

கிரிக்கெட் மைதானமாக மாறியது அரிமளம் செட்டி ஊரணி குளம்


ADDED : ஜூன் 28, 2024 02:28 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 02:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பகுதியில் 12க்கும் மேற்பட்ட குளங்கள், கண்மாய்களில் மழை, நீர்வரத்தின்றி கடந்த 10 ஆண்டுகளாக வறண்டு விட்டன.

குறிப்பாக, அரிமளத்தில் செட்டி நாட்டு பாரம்பரியத்துடன் வடிவமைக்கப்பட்ட செட்டி ஊரணி குளத்தில் நீரின்றி கடந்த பல ஆண்டுகளாக வறண்டு கிடப்பதால், அப்பகுதி இளைஞர்கள் கிரிக்கெட் மைதானமாக மாற்றியுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, நீர் நிரம்பி காட்சியளித்த இந்த குளத்தில், கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடப்பது விவசாயிகளிடம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து, அரிமளம் சுற்று வட்டார பகுதியில், 15,000 ஏக்கரில் தைல மரக்காடுகள் வனத்தோட்டக் கழகம் மூலம் பராமரிக்கப்படுகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மற்றும் வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், தைல மரக்காடுகளில் டிராக்டர் வைத்து உழவு செய்யும் போது, குளங்களுக்குள் வரும் மழைநீர் தடைபடுகிறது. இதனால், குளங்களுக்கு நீர்வரத்து பாதித்து காலப்போக்கில் வறண்டு விட்டன.

ஆனால், தமிழக அரசின் வனத்தோட்டக் கழக வனச்சரக அலுவலர் தாமோதரன் கூறியதாவது:

இப்பகுதியில் உள்ள தைல மரக்காடுகள் மண் அரிப்பை தடுத்தும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் உதவுகின்றன.

இந்த காடுகளில், 46 வரத்து வாரிகள் உள்ளன. இதன் வழியாக, இப்பகுதிகளில் உள்ள குளம், கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது.

தைல மரக்காடுகளில் தடுப்பணை ஏதும் வனத்தோட்டக் கழகம் சார்பாக அமைக்கவில்லை. ஆறு ஆண்டுகளுக்கு இரண்டு முறை மட்டுமே, காடுகளில் உழவு பணி செய்யப்படுகிறது. இதனால், குளங்களுக்கு மழைநீர் செல்லுவது தடுக்கப்படவில்லை. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டங்களையும் வனத்தோட்டக் கழகம் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்

--- நமது நிருபர் - .






      Dinamalar
      Follow us