ADDED : மே 09, 2024 11:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: -ராமேஸ்வரத்தில் தங்கம் கடத்திய வழக்கில் இருந்து தப்பிய மீனவ இளைஞரை நேற்று சுங்கத்துறையினர் கைது செய்தனர்.
ஜன.10ல் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் டூவீலரில் ஏழரை கிலோ தங்க கட்டிகளை கடத்திய ஐசக் 35, என்பவரை சுங்கத்துறையினர் மடக்கி பிடித்த போது தப்பி ஓடினார்.
தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். பின் பிப்.27ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றதில் ஐசக் உள்ளிட்ட 7 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து மார்ச் 25ல் விடுவித்தது.
அதன் பின் ஐசக் உள்ளிட்ட மீனவர்கள் சென்னை விமான நிலையத்தில் ஏப்.5ல் வந்திறங்கிய போது சுங்கத்துறை கைது செய்யவில்லை. 33 நாட்களுக்கு பின் நேற்று ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் ஐசக்கை சுங்கத்துறையினர் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.