ADDED : ஆக 28, 2024 11:35 PM
ஆவின் பால் கொள்முதல், 38 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. இது, இன்னும் அதிகரிக்க, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். கால்நடை பராமரிப்பு துறை, வங்கிகளுடன் இணைந்து, பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்.
ஆவின் பால் விலையை, இதற்கு மேல் குறைக்க முடியாது. நெய் விற்பனையை அதிகரிக்க உள்ளோம். அவற்றை சாேஷக்களில் விற்க ஏற்பாடு நடக்கிறது. ரேஷன் கடைகளில், ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை விரைவில் துவங்க உள்ளது.
ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்றால், ஆவின் பொருட்கைள வாங்க வேண்டும் என, நுகர்வோரை கட்டாயப்படுத்த மாட்டோம். பால் கொள்முதல் அதிகரித்துள்ளதால், புதிய பால் பொருட்கள் உற்பத்தி துவங்க உள்ளன. அவை அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும்.
மாதவரம், அம்பத்துார், சோழிங்கநல்லுார் பால் பண்ணைகளில், தானியங்கி முறையில் முழுமையாக பால் பாக்கெட் உற்பத்தி செய்ய உள்ளோம்.
- மனோ தங்கராஜ்
பால்வளத்துறை அமைச்சர்.