sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் துவக்கம்; 60 ஆண்டு கனவு நிறைவேறியது; 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

/

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் துவக்கம்; 60 ஆண்டு கனவு நிறைவேறியது; 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் துவக்கம்; 60 ஆண்டு கனவு நிறைவேறியது; 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் துவக்கம்; 60 ஆண்டு கனவு நிறைவேறியது; 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

5


ADDED : ஆக 17, 2024 10:18 AM

Google News

ADDED : ஆக 17, 2024 10:18 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களின் வறட்சியான பகுதிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டும் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை இன்று (ஆகஸ்ட் 17) முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதனால் விவசாயிகளின் 60 ஆண்டு கனவு நிறைவேறியது.

ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக அத்திக்கடவு- அவினாசி திட்டம் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது ரூ.1,916 கோடியே 41 லட்சம் செலவில் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 17) அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

சிறம்பம்சங்கள்


* கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டுவதற்காக, 1,065 கி.மீ., நீளத்துக்கு நிலத்தடியில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

* ஒவ்வொரு நீரேற்று நிலையத்திலும், 8 மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன; இதில், ஆறு மோட்டார்கள் இயக்கப்பட்டு, தண்ணீர் 'பம்ப்' செய்யப்படும்; இரு மோட்டார்கள், மாற்று என்ற நிலையில் இருக்கும்.

* எலக்ட்ரிக்கல் ஆட்டோ மெஷின் மற்றும் குளம் குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள ஓ.எம்.எஸ்., ஆகியவை இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை. உலகின் சிறந்த 'அப்டேட்' தொழில்நுட்ப உபரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

* குழாய் பதிக்கப்பட்டுள்ள, 1,065 கி.மீ., தொலைவில், ஐந்து இடங்களில் ரயில்வே தண்டவாளத்தை கடந்தும், ஐந்து இடங்களில் நெடுஞ்சாலையை கடந்தும் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்து வந்த பாதை


* 1957ல் அத்திக்கடவு - அவிநாசி கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற குரல் ஒலிக்க துவங்கியது. அப்போது முதலே பல்வேறு தரப்பினரும் கோரிக்கையை வலியுறுத்தி பேசினாலும், நீண்ட காலமாக திட்டம் முடங்கியிருந்தது.

* 1972ல் திட்டத்தை செயல்படுத்த கொள்கை முடிவெடுக்கப்பட்டது.

* 1996ல் தி.மு.க., ஆட்சியில் திட்டம் தொடர்பான விரிவான ஆய்வு மேற்கொள்ள, அப்போதைய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.

* 2014ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 'மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும், ஒதுக்காவிட்டாலும் திட்டம் நிறைவேறும்' என்றார்.

* 2018ல் ஜெயலலிதா மறைவுக்கு பின், அப்போதைய முதல்வர் பழனிசாமி, திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த உத்தரவிட்டார்.

* 2019ம் ஆண்டு பிப்., 28ம் தேதி இ.பி.எஸ்., தலைமையில் அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

* 2022ல் முதல்வர் ஸ்டாலின், திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டார். தற்போது, 1,652 கோடி ரூபாயில் துவங்கிய திட்டம், 1,916 கோடி ரூபாயில் நிறைவு செய்யப்பட்டது. இன்று திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

அத்திக்கடவு

திட்டத்தில் அத்திக்கடவு என்ற பெயர் இருந்தாலும், அந்த ஊருக்கும் இந்த திட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அத்திக்கடவு என்ற கிராமம், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ளது. ஆரம்பத்தில், இந்த கிராமத்தில் இருந்து தண்ணீர் பம்பிங் செய்ய வேண்டும் என்பது திட்டத்தின் கோரிக்கையாக இருந்தது.

ஆனால், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மத்தியில் அதிருப்தி வரும் என்ற காரணத்தால், அத்திக்கடவில் இருந்து தண்ணீர் எடுக்கும் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. இப்போது செயல்படுத்தப்பட்டுள்ள திட்டத்துக்கான நீரேற்று நிலையம், ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் அணைக்கட்டுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு, மேற்கு நோக்கி கொண்டு வரப்படுகிறது.






      Dinamalar
      Follow us