தமிழகத்தில் பி. எச். டி., படிப்புகளின் தரம் : கவர்னர் ரவி அதிருப்தி
தமிழகத்தில் பி. எச். டி., படிப்புகளின் தரம் : கவர்னர் ரவி அதிருப்தி
UPDATED : செப் 13, 2024 09:00 PM
ADDED : செப் 13, 2024 08:41 PM

சென்னை: தமிழகத்தில் பி..எச்.டி. படிப்புகளின் தரம் திருப்திகரமாக இல்லை என கவர்னர் ஆர்.என். ரவி பேசினார்.
தமிழக உயர் கல்விச் சிறப்பு' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு கவர்னர் ஆர்.என். ரவி பேசியது, நாட்டின் சிறந்த கல்லூரிகளில் முதல் 20 இடங்களை தமிழகத்தை சேர்ந்த 28 கல்வி நிறுவனங்கள் தொடர்ச்சியாக பெற்று வருவது பெருமைக்குரியது.
இந்த நிகழ்ச்சியின் நோக்கம் இங்குள்ள பிற கல்லூரிகள் மற்ற உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கு வழிசெய்வதாகும். தமிழகத்தில் பிஎச்.டி படிப்புக்கான கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும்.
இங்கு பிஎச்.டி முடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், அதன் தரம் திருப்திகரமாக இல்லை. ஒரு சில கல்வி நிறுவனங்களில் மட்டுமே பிஎச்.டி-க்கான கல்வி தரம் சிறப்பாக உள்ளது. அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் பிஎச்.டி கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் ,, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

