ADDED : ஜூன் 27, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்டசபையில் பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் பேசியது:
மாவட்ட திட்டக்குழுவை மாற்றி அமைக்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை, முழு நேர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். மின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
அத்துடன், வன்னி யர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டால் பயனில்லை என, நேற்று முன்தினம் அமைச்சர் சிவசங்கர் பேசியதற்கு பதிலளிக்க துவங்கினார்.
அதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. அதை கண்டித்து, பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.