ADDED : மே 04, 2024 10:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பள்ளிக்கல்வி துறை சார்பில், முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
அனைத்து பள்ளிகளுக்கும், கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னும் பல்வேறு பள்ளிகளில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக, தொடர்ந்து புகார்கள் வந்தபடி உள்ளன.
கடுமையான வெப்பம் நிலவும் இக்காலத்தில், கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. இதை தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தவும். அதை மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதில், அனைத்து கல்வி அலுவலர்களும் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.