ADDED : மார் 10, 2025 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி, மார்ச் 10-
துாத்துக்குடி, தாளமுத்துநகர் அருகே வெள்ளப்பட்டி கடற்கரையில் கியூ பிரிவு போலீசார் நேற்று அதிகாலை திடீரென சோதனை நடத்தினர்.
இலங்கைக்கு படகுகள் வாயிலாக கடத்துவதற்காக, 'அசோக் லேலண்ட் தோஸ்த் மற்றும் டாடா ஏஸ்' சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்ட 30 கிலோ பீடி இலைகள், சரக்கு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடத்தலில் ஈடுபட முயன்றதாக சிலுவைப்பட்டி, கணபதி நகரை சேர்ந்த மாயாண்டி, 38, அவரது தம்பி மகேஷ்குமார், 28, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த ஆண்டனி ஜோசப், 28, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு, 60 லட்சம் ரூபாய்.