sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மக்கும் 'இயற்கை' பிளாஸ்டிக்; காக்கும் சுற்றுச்சூழல்

/

மக்கும் 'இயற்கை' பிளாஸ்டிக்; காக்கும் சுற்றுச்சூழல்

மக்கும் 'இயற்கை' பிளாஸ்டிக்; காக்கும் சுற்றுச்சூழல்

மக்கும் 'இயற்கை' பிளாஸ்டிக்; காக்கும் சுற்றுச்சூழல்


ADDED : ஆக 25, 2024 02:47 AM

Google News

ADDED : ஆக 25, 2024 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்றாட தேவைகளுக்கு இன்றியமையாதது என்ற அளவுக்கு, நம்முடன் பிளாஸ்டிக் ஒட்டிக்கொண்டு விட்டது.

உற்பத்தி செய்யப்படும் கடினமான பாலிதீன் பொருட்கள், பயன்பாட்டில் நன்மை செய்பவையாக இருந்தாலும், மெலிதான பிளாஸ்டிக் பைகள் மண்ணில் மக்காமல் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை உருவாக்குகின்றன.

பாலிதீன் தயாரிக்கப் பயன்படும், பாலி எத்திலீன், பாலி புரோப்பிலீன் போன்ற மக்காத மூலப்பொருட்களுக்கு பதில் எளிதில் மக்கக் கூடிய மூலப்பொருட்களை பயன்படுத்தும் வகையிலான கண்டுபிடிப்பை 'Ukhi' என்ற 'ஸ்டார்ட் அப்' நிகழ்த்தியிருக்கிறது.

இயற்கைத் தாவரக் கலவை


சிறுகாஞ்சொறி(Nettle), ஆளி, சணல் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட இயற்கையான தாவரப் பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்காக, தனித்துவமான, குறைந்த விலை மற்றும் மக்கும் பிளாஸ்டிக்கை, இந்த 'ஸ்டார்ட் அப்' உருவாக்கியிருக்கிறது. முதலில் பிளாஸ்டிக் துகள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பாரம்பரிய பெட்ரோலியம் சார்ந்த பிளாஸ்டிக்கை விட இந்த பிளாஸ்டிக் துகள்கள் வலிமையானவை; இலகுவானவை; மலிவானவை. இவற்றின் மூலம் தினசரி உபயோகிக்க பேக்கிங் மெட்டீரியல், பாலிபேக்குகள், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய தட்டுகள், டப்பாக்கள் போன்றவற்றை உருவாக்க முடியும்.

தொழில்துறைகளுக்குப் பயன்


இந்த 'பயோபிளாஸ்டிக்' துகள்கள் பேஷன், மருத்துவம், ஜவுளி இழை மற்றும் துணி உள்பட பல்வேறு தொழில்துறைகளிலும் பயன்படுத்தலாம். இந்திய மற்றும் சர்வதேச மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு இணங்கியுள்ளது.இந்த மூலப்பொருட்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பைகள் 3-6 மாதங்களுக்குள் மக்குவதால், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கிறது; நீடித்த தீர்வையும் வழங்குகிறது.

இயற்கைப்பொருட்களிலிருந்து தயாரிப்பதால், பைகள் மற்றும் பேக்கேஜிங் பொருட்கள் நச்சுத்தன்மையற்றவையாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகவும் உள்ளன.

அவை மிகக் குறைந்த அளவு கார்பன் மற்றும் நீர் தடயங்களைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், தடையின்றி விரைவாக மண்ணுக்குள் சிதைந்துவிடும்; நச்சுத் தடம் எதுவும் இல்லை.

இணையதளம்: www.ukhi.org. மொபைல்போன்: +91 75033 41387.

மேலும் விபரங்களுக்கு: இ-மெயில்: Sethuraman.sathappan@gmail.com; மொபைல்போன்: 98204 51259; இணையதளம் www.startupandbusinessnews.com

- சேதுராமன் சாத்தப்பன் -






      Dinamalar
      Follow us