பாலியல் பிசினஸ் வருமானத்தில் பெங்களூருவில் 'பிரியாணி ஷாப்'; 15 பெண்கள் மீட்பு
பாலியல் பிசினஸ் வருமானத்தில் பெங்களூருவில் 'பிரியாணி ஷாப்'; 15 பெண்கள் மீட்பு
ADDED : செப் 08, 2024 05:49 AM

கோவை: 'வாட்ஸ் ஆப்' குழு துவக்கி, வெளிநாட்டு பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு புரோக்கர்களை, கோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 15 பெண்கள் மீட்கப்பட்டனர்.
கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் ( வடக்கு) கூறியதாவது:
கோவை மாநகரில், நட்சத்திர ஓட்டல்களில் வெளிநாட்டு பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக புகார் வந்தது. தனிப்படை போலீசார் விசாரித்தனர். புரோக்கர்கள் தேனியைச் சேர்ந்த சிக்கந்தர் பாதுஷா,41, ஊட்டியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ், 30 கைது செய்யப்பட்டனர். மேலும் ஏழு பேர் தேடப்படுகின்றனர்.
இந்த கும்பல், வெளிநாட்டு பெண்களை அடையாளம் கண்டு விபசார தொழிலில் ஈடுபடுத்த, 'ஆல் இந்தியா ஏஜென்ட்' என்ற பெயரில் 'வாட்ஸ் ஆப் குழு' ஏற்படுத்தியுள்ளனர். டில்லியை சேர்ந்த கபீர்சிங் என்பவர் தலைமையில், 117 ஏஜென்டுகள், வாட்ஸ் ஆப் குழுவில் உள்ளனர். இந்தியா மற்றும் ரஷ்யா, இந்தோனேசியா, தாய்லாந்து நாட்டு பெண்களை ஈடுபடுத்தி உள்ளனர். இவர்களில், 15 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 10 சிம்கார்டுகள், 16 மொபைல் போன், 7 வங்கி கணக்கு புத்தகங்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிக்கந்தர் பாதுஷா மீது, கோவை, சென்னை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஏஜென்ட்களாக செயல்பட்டு வரும். 117 நபர்களை பிடிக்க 12 பேர் கொண்ட நான்கு தனிப் படைஅமைக்கப்பட்டுள்ளது. விபச்சாரத்தில் கிடைத்த லாப பணத்தில், சிக்கந்தர் பாதுஷா பெங்களூருவில் பிரியாணி கடை நடத்தி வருவது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு துணை கமிஷனர் ஸ்டாலின் தெரிவித்தார்.