பா.ஜ., கூட்டணியில் 5வது இடத்தில் பா.ம.க.,: இ.பி.எஸ்., சாடல்
பா.ஜ., கூட்டணியில் 5வது இடத்தில் பா.ம.க.,: இ.பி.எஸ்., சாடல்
ADDED : ஏப் 16, 2024 05:57 PM

சேலம்: 'அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த போது 2வது இடம் பிடித்த பா.ம.க., இப்போது பா.ஜ., கூட்டணியில் 5வது இடத்தில் உள்ளது' என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார்.
பிரதமர் வேட்பாளர் யார்
தர்மபுரி தொகுதி அதிமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் இ.பி.எஸ்., பேசியதாவது: எங்களின் பிரதமர் வேட்பாளர் யார் எனக் கேட்கிறார்கள். ஆட்சி அதிகாரம் எங்களுக்கு தேவை இல்லை. மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அவர்களின் குரலாய் அதிமுக எம்.பியின் குரல் பார்லிமென்டில் ஒலிக்க வேண்டும்.
அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த போது 2வது இடம் பிடித்த பா.ம.க., இப்போது பா.ஜ., கூட்டணியில் 5வது இடத்தில் உள்ளது. பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்கும் அளவிற்கு பா.ம.க.,வின் நிலை சென்றுவிட்டது. அதிமுக.,வுக்கு ஓட்டு போடுவது வேஸ்ட் என்கிறார் அன்புமணி.
அன்புமணியை சாடிய இ.பி,எஸ்.,
அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட்டு தான் எம்.பி ஆக அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். சுயமாக, சுதந்திரமாக பேச வேண்டும் என்றால் தனியாக இருப்பது தான் சிறந்தது. நீட் தேர்வை பா.ஜ., தான் அமல்படுத்தியது. அவர்களுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது.அதிமுக இருண்ட ஆட்சி என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். திமுக தான் இருண்ட ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.

