ADDED : ஜூன் 19, 2024 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேர்தலுக்கு தேர்தல் தி.மு.க., புதுப்புது யுக்திகளை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தி.மு.க.,விற்கு செல்வாக்கு கூடிஉள்ளது என்றால், லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு இருக்க வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் அ.தி.மு.க.,வும் தனித்துப் போட்டியிடும். பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்கக்கூடாது என ஜெயலலிதா எடுத்த கொள்கை முடிவிற்கு மாறாக கூட்டணி வைத்து விட்டோமே என்ற உறுத்தல் உள்ளது.
லோக்சபா தேர்தல் ஓட்டுகளை வைத்து தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்து விட்டது எனக்கூற முடியாது. எத்தனை தேர்தல் வந்தாலும் எக்காலத்திலும் தமிழகத்தை பா.ஜ., ஆள முடியாது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்.
-- செல்லூர் ராஜு, முன்னாள் அமைச்சர்