ரூ.1 கோடி கேட்டு ஆர்.எஸ்.பாரதிக்கு பா.ஜ., 'நோட்டீஸ்'
ரூ.1 கோடி கேட்டு ஆர்.எஸ்.பாரதிக்கு பா.ஜ., 'நோட்டீஸ்'
ADDED : ஜூன் 27, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு எதிராக, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டி இருந்தார்.
இது, அண்ணாமலை நற்பெயருக்கு களங்கம் விளைவித்திருப்பதாக கூறி, 1 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு, ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணா மலை சார்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.
நோட்டீசில், 'பாரதி தெரிவித்த கருத்து, பொது வெளியில் அண்ணாமலையின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளது; பொறுப்பற்ற முறையில் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
இதற்காக, மூன்று நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். நஷ்ட ஈடாக, 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என, கூறப்பட்டுஉள்ளது.