தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ திருமா கோரிக்கையை பா.ஜ., ஆதரிக்கிறது: வானதி

திருமா கோரிக்கையை பா.ஜ., ஆதரிக்கிறது: வானதி

திருமா கோரிக்கையை பா.ஜ., ஆதரிக்கிறது: வானதி


ADDED : செப் 16, 2024 02:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2024 02:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில், பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் அளித்த பேட்டி:

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆட்சியில் அதிகார பகிர்வு வேண்டும் என கூறியுள்ளார். ஆட்சியில் பங்கு என அவர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

டில்லியில், பா.ஜ., பட்டிலினத்தவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்; தமிழகத்தில் எப்படி நடத்துகின்றனர் என்பதை திருமாவளவன் பார்த்துள்ளார். அதன் வெளிப்பாட்டினால் இப்போது பேசியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த அருந்ததியர் இனத்தவரை பா.ஜ., மத்திய அமைச்சராக்கி அழகு பார்க்கிறது. இது தான் சமூக நீதி.

திருமாவளவனின் மதுவிலக்கு கோரிக்கையை பா.ஜ., ஆதரிக்கிறது. அதில் அவர் வெற்றிப்பெற வேண்டும் என்றும் வாழ்த்துகிறோம்.

கோவை அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம் அரசியலாக்கப்படுகிறது. தி.மு.க., கூட்டணி கட்சியினரின் பொய்களை பார்லிமென்ட்டில் ஆதாரத்துடன் மத்திய நிதி அமைச்சர் வெளியிடுகிறார். அதனால் தான் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, காங்., - தி.மு.க., கூட்டணி கட்சியினர் இதை பெரிதாக்குகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us