ADDED : ஜூன் 13, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை, 4:15 மணிக்கு போனில் பேசியவர், 'சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது' எனக்கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார்.
விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் குழு, வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியோடு, விமான நிலையத்தில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். வெடிகுண்டு வைக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.