sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கமலாலயத்திற்கு குண்டு மிரட்டல்

/

கமலாலயத்திற்கு குண்டு மிரட்டல்

கமலாலயத்திற்கு குண்டு மிரட்டல்

கமலாலயத்திற்கு குண்டு மிரட்டல்


ADDED : ஜூலை 06, 2024 02:53 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, எழும்பூரில் மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது. மாநிலத்தில், எந்த இடத்தில் இருந்தும், அவசர போலீஸ் எண், '100'க்கு 'டயல்' செய்தால், அந்த மையத்திற்கு தான் அழைப்பு வரும். நேற்று மதியம், 1:17 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறையை மர்ம நபர் தொடர்பு கொண்டுள்ளார்.

சென்னை, தி.நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள, தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்து தொடர்பை துண்டித்துள்ளார்.

இதுகுறித்து, ரோந்து பணியில் இருந்த மாம்பலம் காவல் நிலைய எஸ்.ஐ., பாளையம் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது தலைமையில் கமலாலயம் சென்ற போலீசார், அங்கு இருந்தோரை வெளியேற்றினர். மதியம், 2:15 - 3:45 மணி வரை, இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி தலைமையிலான வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்; எதுவும் சிக்கவில்லை. இதனால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என, போலீசார் முடிவுக்கு வந்தனர். மிரட்டல் விடுத்த நபர் பயன்படுத்திய மொபைல் போன் எண் குறித்து போலீசார் ஆய்வு செய்தனர். வேலுார் மாவட்டத்தில் இருந்து பேசியது தெரியவந்தது. பயங்கரவாதி ஒருவரின் பெயரை சொல்லி, அவரை விடுவிக்க வேண்டும் என, அந்த நபர் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us