ADDED : மார் 02, 2025 03:25 AM
பித்தளை சிங்கம் பரிசளிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க., நிர்வாகிகள், 250 கிலோ எடையுள்ள பிரமாண்டமான பித்தளை சிங்கம் சிலை செய்து எடுத்து வந்து, முதல்வர் ஸ்டாலினுக்கு பரிசளித்தனர். அந்த பித்தளை சிங்கம், 'ஹிந்தி தெரியாது போடா, தமிழ் வாழ்க' என்று முழங்கியது.
அதே மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் சிலர், சிவன், பார்வதி, முருகன், விஷ்ணு, கிருஷ்ணர் உள்ளிட்ட வேடங்களில் வந்திருந்தனர். 'கலைகளுக்கு முதல்வர் முக்கியத்துவம் அளிப்பதால், அவருக்கு வாழ்த்து தெரிவிக்க இப்படி வந்தோம்' என்றனர்.
ஈரோடில் இருந்து மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த, அரசு பள்ளி மாணவ - மாணவியர், 33 பேர், சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். சீருடையில் வந்த அவர்கள், முதல்வருக்கு மலைத்தேன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர்.