ADDED : செப் 03, 2024 02:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: சேலம் மாவட்டம், ஆத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அலுவலகம் செயல்படுகிறது.
இங்கு, ஆர்.ஐ.,யாக பணிபுரிந்த கனிமொழி, ஒருவரிடம் தடையில்லா சான்று வழங்குவதற்கு, லஞ்சம் கேட்பது போன்ற வீடியோ பரவியது.
தாசில்தாருக்கு ஒரு தொகை கொடுக்க வேண்டும்; மற்றவர்களையும் பார்க்க வேண்டும் உள்ளிட்ட வீடியோ காட்சி பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தொடர்பாக, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, மாவட்ட வருவாய் அலுவலருக்கு உத்தரவிட்டார்.
ஆர்.ஐ., கனிமொழியை 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா நேற்று உத்தரவிட்டார்.