ADDED : ஆக 25, 2024 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் தளவாய் தெருவை சேர்ந்தவர் ராஜா 50. டீ மாஸ்டர். தம்பி கோபால் 40. இருவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆரல்வாய் மொழியிலிருந்து நாகர்கோவிலுக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். பைக்கை ராஜா ஓட்டினார்.
தேரேகால்புதூர் அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த மினி லாரி வேகத்தடையை கடப்பதற்காக பிரேக் போட்டதால் பைக் நிலைதடுமாறி அதன் பின்பக்கத்தில் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேர்க்கப்பட்டதில் ராஜா இறந்தார்.
கோபாலும் நேற்று அங்கு இறந்தார். நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.