sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வட மாவட்டங்களுக்கான பட்ஜெட் திட்டங்கள்

/

வட மாவட்டங்களுக்கான பட்ஜெட் திட்டங்கள்

வட மாவட்டங்களுக்கான பட்ஜெட் திட்டங்கள்

வட மாவட்டங்களுக்கான பட்ஜெட் திட்டங்கள்


UPDATED : மார் 15, 2025 03:47 AM

ADDED : மார் 15, 2025 01:02 AM

Google News

UPDATED : மார் 15, 2025 03:47 AM ADDED : மார் 15, 2025 01:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலநிலை மாற்றம்



 திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில், 2,471 ஏக்கர் பரப்பு அளவில், 10 கோடி ரூபாயில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும்.

 திருவண்ணாமலை மாவட்டத்தில், 10 கோடி ரூபாயில் வெண்ணெய் மற்றும் பால் பவுடர் சிப்பமிடும் நவீன இயந்திரம் அமைக்கப்படும்.

 திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 138 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம், 150 கோடி ரூபாய் மதிப்பில், 76,000 மக்கள் பயன் பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.

உயிர் அறிவியல் பூங்கா


 கள்ளக்குறிச்சியில் காலணி திறன் பயிற்சி மையத்தை, 'சிப்காட்' அமைக்கும்

 தமிழகத்தை முன்னிலைப்படுத்த, அதிநவீன உயிர் அறிவியல் பூங்கா, சென்னை அருகில் உருவாக்கப்படும்.

 சென்னையில் அனைத்து பகுதிகளுக்கும் சமமான குடிநீரை வினியோகிக்க, 2,423 கோடி ரூபாய் மதிப்பில், 'முதன்மை சுற்றுக்குழாய் திட்டம்' துவக்கப்படும்.

 சென்னை மாநகராட்சியில், 200 கோடி ரூபாய் நகர்ப்புற பத்திரங்கள் வாயிலாக, கூடுதல் நிதி ஆதாரங்கள் திரட்ட முயற்சிக்கப்படும்.

வேளச்சேரியில் மேம்பாலம்


 சென்னையில் 570 கி.மீ., நீள சாலைப் பணிகள், 486 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்.

 சென்னை வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட இடங்களில் ஏற்படும் வாகனப் போக்குவரத்தை தவிர்க்க, வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து, குருநானக் கல்லுாரி சந்திப்பு வரை, 3 கி.மீ., நீளத்திற்கு, 310 கோடி ரூபாயில் மேம்பாலம் அமைக்கப்படும்.

 ரயில்வே துறையுடன் இணைந்து, கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம், 70 கோடி ரூபாயில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும்.

மின்சாரம் தயாரிப்பு



 கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில், 21 மெகாவாட் திறன் கொண்ட, திடக்கழிவில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையம், 3,450 கோடி ரூபாயில் துவக்கப்படும்

 தாம்பரம் மாநகராட்சி அருகில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில், 15 லட்சம் கிலோ மறுசுழற்சி செய்ய இயலாத திடக்கழிவு வாயிலாக, 15 முதல் 18 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்

 அடையாறு நதியை மீட்டெடுத்து அழகுற சீரமைக்கும் திட்டம், 1,500 கோடி ரூபாயில் தனியார் பங்களிப்புடன் துவக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை முதல் திரு.வி.க., பாலம் வரையிலான பணிகள், 15 மாதங்களில் முடிக்கப்படும்.

 சென்னையை பருவநிலை மாற்றத்திலிருந்து மீட்கும் தன்மையுடைய, 'ஸ்பாஞ்ச் பார்க்' என்ற மழைநீர் உறிஞ்சும் பல்லுயிர் பூங்காக்கள், 88 கோடி ரூபாய் மதிப்பில், ஏழு இடங்களில் அமைக்கப்படும்.

உயர்மட்ட மேம்பால சாலை

 சென்னையில் பெருகி வரும், போக்குவரத்து நெரிசலை கையாளும் வகையில், கிழக்கு கடற்கரை சாலையில், திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை, 14.2 கி.மீ.,க்கு, நான்கு வழித்தட உயர்மட்ட மேம்பாலச்சாலை, 2,100 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும். இந்தப் பணியானது, தமிழக நெடுஞ்சாலை துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் வாயிலாக மேற்கொள்ளப்படும்

 தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், ஒரகடம் - செய்யாறு இடையே தொழில் வழித்தடம் உருவாக்கப்படும். நடப்பாண்டு, 250 கோடி ரூபாயில் முதற்கட்ட பணிகள் துவக்கப்படும்.

 சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழியில் இருந்து திருக்கழுக்குன்றம் வழியாக மாமல்லபுரத்திற்கு, 28 கி.மீ.,க்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையுடன் இணைக்கப்படும்.

மெட்ரோ ரயில் திட்டங்கள் நீட்டிப்பு


 பூந்தமல்லி -போரூர் மெட்ரோ ரயில் வழித்தடம், இந்தாண்டு டிசம்பர் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

 கோவை அவிநாசி சாலை - சத்தியமங்கலம் சாலை இடையே, 10,740 கோடி ரூபாயிலும், மதுரை திருமங்கலம் - ஒத்தக்கடை இடையே, 11,368 கோடி ரூபாயிலும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை, மத்திய அரசின் மூலதன பங்களிப்பு பெற அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் பணிகள் துவங்கப்படும்

 சென்னையில், விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே 15.46 கி.மீ., தொலைவுக்கு, 9,335 கோடி ரூபாய்; கோயம்பேடு முதல் ஆவடி வழியாக பட்டாபிராம் வரை, 21.76 கி.மீ., தொலைவுக்கு, 9,744 கோடி; பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் வழியாக சுங்குவார்சத்திரம் வரை, 27.9 கி.மீ., தொலைவுக்கு, 8,779 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு உள்ளன

 தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வழியாக கிண்டி வரை, 21 கி.மீ., தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் முதல் உயர் நீதிமன்றம் வரை, 6 கி.மீ., தொலைவுக்கும், மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும்.

 டில்லி - மீரட் இடையே, மித அதிவேக ரயில் போக்குவரத்து இயக்கப்படுவது போன்று, தமிழகத்தில் மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்

 சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் - விழுப்புரம், 167 கி.மீ., துாரம்; சென்னை - காஞ்சிபுரம் - வேலுார், 140 கி.மீ., துாரம்; கோவை - திருப்பூர் - ஈரோடு - சேலம், 185 கி.மீ., ஆகிய வழித்தடங்களில், மணிக்கு, 160 கி.மீ., வேகத்தில் மித அதிவேக ரயில்வே அமைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ஆராயப்படும்

 மாமல்லபுரம், ஊட்டி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணியரை கவரும் வகையில், அப்பகுதியின் நுண்ணிய சுற்றுச்சூழல் தன்மையை கருத்தில் வைத்து, 'ரோப்வே' எனும் உயர் போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ஆராயப்படும்.

2,000 ஏக்கரில் 'குளோபல் சிட்டி'


சென்னை அருகே, 2,000 ஏக்கரில், 'குளோபல் சிட்டி' என்ற பெயரில் புதிய நகரம் ஏற்படுத்தப்படும்.

தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், நிதி நுட்ப நகரங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உயர் தொழில்நுட்ப மையங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், மாநாட்டு கூடங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி சேவை நிறுவனங்கள் மற்றும் பல வசதிகள் அடங்கியதாக, இந்த நகரம் அமையும்.

உலகத்தர வசதியுடன், 'குளோபல் சிட்டி' என்ற பெயரில் அமையும் இப்புதிய நகருக்கான முதற்கட்ட பணிகளை, 'டிட்கோ' நிறுவனம் விரைவில் துவங்கும்.

பல்கலைக்கு ரூ.500 கோடி


 சென்னை அண்ணா பல்கலையை, அடுத்த ஐந்தாண்டுகளில், நாட்டின் சிறந்த கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில், முதல் பத்து இடங்களுக்குள்ளும், உலக அளவிலான, 'கியூ.எஸ்' தரவரிசை பட்டியலில் முதல். 150 இடங்களுக்குள்ளும் இடம்பெறும் வகையில், உரிய செயல்திட்டம் வகுக்கப்படும்.

 இதற்கு, அரசு பங்களிப்பு, பல்கலை நிதி, முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன், அடுத்த ஐந்தாண்டுகளில், 500 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

 மாணவர்களிடம் அறிவியல் சிந்தனையை வளர்க்கவும், தொழில்நுட்ப வசதிகளை அறிமுகம் செய்யவும், சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைந்து, நவீன அறிவியல் மையம் சென்னையில் அமைக்கப்படும்.

 இங்கு, 100 கோடி ரூபாய் செலவில், சென்னை குழந்தைகளுக்கான அறிவியல் பூங்கா, நவீன வானவியல் தொலைநோக்கு வசதிகள், ஆழ்கடல் உயிரினங்கள், வானவியல் நகர்வுகளை உணரும் வகையிலான, 'டிஜிட்டல்' அரங்குகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

பன்முக போக்குவரத்து முனையம்


 சென்னை மாவட்டம் ஆலந்துார், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், பெரம்பலுார் ஆகிய நகரங்களில், புதிய கலை அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்படும்.

 சென்னை கிண்டியில், பஸ், புறநகர் ரயில், மெட்ரோ ரயில் சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில், நவீன வசதிகளுடன் பன்முக போக்குவரத்து முனையம், 50 கோடி ரூபாயில் அமைக்கப்படும்

 வண்ணாரப்பேட்டையில், பஸ், புறநகர் ரயில், மெட்ரோ ரயில் சேவைகளை ஒருங்கிணைந்த முறையில் மக்கள் பயன்படுத்தும் வகையில் போக்குவரத்து முனையம், 50 கோடி ரூபாயில் அமைக்கப்படும்

 கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகரத்தை ஒட்டி உலகத்தரம் வாய்ந்த, உள்கட்டமைப்பு வசதிகளுடன், ஓசூர் அறிவுசார் பெருவழித்தடம் அமைக்கப்படும்.

தோழி விடுதிகள்


 பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், 'தோழி' விடுதிகள் வரும் நிதியாண்டில், காஞ்சிபுரம், ஈரோடு, கரூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், 10 இடங்களில், 800 பெண்கள் பயனடையும் வகையில், 77 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.

 மூன்றாம் பாலினத்தவரை, ஊர்க்காவல் படையில் சேர்த்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக, மூன்றாம் பாலினத்தவர் 50 பேரை வைத்து, சென்னை, தாம்பரம், ஆவடி மாநகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.






      Dinamalar
      Follow us