ADDED : ஜூலை 18, 2024 02:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஆவினில் பால் கொள்முதல் அதிகரித்துள்ள நிலையில், பல மாதங்களுக்கு பின் வெண்ணெய் உற்பத்தி துவக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2023ல், ஆவின் பால் கொள்முதல், 41 லட்சம் லிட்டரில் இருந்து 26 லட்சம் லிட்டராக சரிந்தது. இதனால், 2023 தீபாவளிக்கு முன், வெண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
ஆனால், தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை குறைத்ததை அடுத்து, பால் உற்பத்தியாளர்கள் மீண்டும் ஆவின் பக்கம் திரும்பியுள்ளனர்; கொள்முதல், 36 லட்சம் லிட்டராக அதிகரித்து உள்ளது.
இதையடுத்து, வெண்ணெய் உற்பத்தியை ஆவின் மீண்டும் துவக்கி உள்ளது.
உப்பு கலந்த மற்றும் உப்பு கலக்காத வெண்ணெய் 100 மற்றும் 500 கிராம் பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வரவுள்ளது.

