குடும்பத்தோட வரலாம்; குதுாகலமாக ஷாப்பிங் செய்யலாம்: முதல் நாள் தினமலர் ஷாப்பிங் திருவிழாவில் பெண்கள் உற்சாகம்
குடும்பத்தோட வரலாம்; குதுாகலமாக ஷாப்பிங் செய்யலாம்: முதல் நாள் தினமலர் ஷாப்பிங் திருவிழாவில் பெண்கள் உற்சாகம்
UPDATED : ஆக 03, 2024 03:17 AM
ADDED : ஆக 03, 2024 03:08 AM

மதுரை தமுக்கம் மைதானத்தில் துவங்கிய தினமலர் ஷாப்பிங் திருவிழா முதல் நாளே விழாக்கோலம் பூண்டுள்ளது. குடும்பத்துடன் வருகை தந்த பெண்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏராளான பொருட்களை அள்ளிச் சென்றனர்.
ஷாப்பிங் அனுபவம் குறித்து மனம் திறந்த பெண்கள்...
அட்டகாசமான கலெக் ஷன்ஸ்
பாக்கியலட்சுமி, அருப்புக்கோட்டை:
தினமலர் வீட்டுஉபயோகப் பொருட்கள் கண்காட்சி என்றாலே அம்மா லட்சுமி, தங்கை ஜெயலட்சுமி என குடும்பத்துடன் முதல் நாளே ஆஜராகி விடுவோம். இந்தாண்டும் எதிர்பார்த்த
கலெக் ஷன்ஸ் இருந்தன. குறிப்பாக பெண்களுக்கான சேலை, சுரிதார் உள்ளிட்டவை அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற விலையில் கிடைக்கின்றன. ஆர்கானிக் உணவுப் பொருட்கள் இந்தாண்டு அதிகம் இடம் பெற்றுள்ளன. என்ஜாய் பண்ணி ஷாப்பிங் செய்தோம். பர்னிச்சர், கட்டிலுக்கு ஆர்டர் கொடுத்துள்ளோம். இன்னும் ஒருநாள் கட்டாயம் வருவோம்.
![]() |
தீபலட்சுமி, விருதுநகர்:
மதுரையில்நடக்கும் தினமலர் ஷாப்பிங்கை தவறவிட மாட்டேன். நான் யூ டியூப் சேனல்
நடத்துகிறேன். இதனால் ஆன்லைன் சேல்ஸ் குறித்து பல தகவல்கள், அனுபவங்கள் எனக்கு உண்டு. ஆனால் இதுபோல் ஆன் ஸ்பாட் ஷாப்பிங் செய்வது தான் நல்ல அனுபவத்தை தரும். தரமான பொருட்களா என பார்த்து வாங்க முடியும். ஸ்பெஷல் ஆபர்கள் அதிகம். ஆன்லைன் ஷாப்பிங்கில் இதுபோன்ற ஆபர்கள் இருக்காது. நம்பகத்தன்மையும் குறைவு. ஜூவல்லரியில் சில கலெக் ஷன்கள் பார்த்து வைத்துள்ளேன். திங்களுக்குள் நிச்சயம் மீண்டும் வருவேன்.
குட்டீஸ்கள் ஹேப்பி
ஹம்சா, மதுரை:
மதுரையில் பிரமாண்ட பொழுது போக்கான ஷாப்பிங் என்றாலே அது ஆண்டிற்கு ஒருமுறை தினமலர் நடத்தும் இந்த ஷாப்பிங் தான்.குழந்தைகளை மகிழ்விப்பதற்கான ஏராளமான
விளையாட்டுகள் உள்ளது வரவேற்கத்தக்கது. குறிப்பாக பொம்மைகள், சிக்குபுக்கு ரயில், வாட்டர் ரோலர், ஒட்டக சவாரி என ஏராளம். சிறுதானியப் பொருட்கள் அணிவகுப்பு இம்முறை அதிகம். மதுரை மக்களே 'மிஸ்' பண்ணிடாதீங்க. நம்பிக்கையோடு குடும்பமாக போய் 'என்ஜாய்' பண்ணலாம்.
ஆபர்கள் சூப்பர்
உஷா ராணி, மதுரை:
தென்னாப்பிரிக்காவில் உள்ளோம். 40 நாட்கள் விடுமுறைக்காக மதுரை வந்திருக்கிறோம். தினமலர் ஷாப்பிங் என்றவுடன் மகள்நிதியுடன் முதல்நாளே வந்துவிட்டோம். பாரம்பரிய பொருட்கள் ஸ்டால்கள் அருமை. எங்களுக்கு பிடித்த பருத்தி பால் பவுடர், சுக்கு பொடி, வடகம் போன்றவை வாங்கினோம். பல பொருட்களுக்கு ஆபர் உள்ளது சந்தோஷமான விஷயம். அழகுசாதன பொருட்கள் அனைத்தும் கவர்ச்சிகரமாக இருந்தன. ஸ்டால்கள் அமைப்பு நன்றாக உள்ளது. ஷாப்பிங் முடித்துவிட்டு புட்கோர்ட் சென்று ஸ்நாக்ஸ் சாப்பிட்டு 'ரிலாக்ஸ்'ஆகஷாப்பிங் செய்தோம்.
குவிந்து கிடக்கும் பொருட்கள்
திவ்யா, சிவகாசி:
முதல் நாளே போக வேண்டும் என அம்மா, அப்பாவுடன் வந்தேன். எனக்கு தேவையான கிலிப்ஸ், ஹேர்பின், அழகு சாதனப் பொருட்கள் வாங்கினோம். பொட்டிக்ஸில் ஏராள கலெக் ஷன்ஸ் இருந்தது. செலக் ஷன் செய்யவதற்குள் திக்குமுக்காடிப்போனோம். பொருட்கள் அனைத்தும் தரமானதாக இருப்பதால் விலையை பற்றி யோசிக்க முடியவில்லை. ஸ்டால்களில் குவிந்து கிடக்கும் பொருட்களை பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது. பொறுமையாக அனைத்து ஸ்டால்களையும் பார்வையிட்டு பிடித்ததை வாங்கினோம்.
![]() |
வாங்க ஒரு ரவுண்ட் போகலாம்... சாப்பிடலாம்
கமகம பிரியாணி
ஷாப்பிங் செய்த களைப்பில் என்னடா செய்யலாம் என நினைக்கும் போதே கமகம பிரியாணி நம் மூக்கை துளைக்கிறது. வாசம் வந்த பகுதிக்கு சென்றால் வேணு பிரியாணி நம்மை ஆசையோடு வரவேற்கிறது.மட்டன், சிக்கன் பிரியாணிகள், மட்டன், சிக்கன் கோலா, நுாடுல்ஸ், சிக்கன், மட்டன் ரைஸ் என பல வகை உணவுகள் நாக்கு சொட்ட வைக்கிறது. ரூ.200க்கு மட்டன் பிரியாணி, ரூ.180க்கு சிக்கன் பிரியாணி, ரூ.30க்கு கோலா உருண்டைகள் கிடைக்கின்றன.
ஜப்பானிஷ் ரேமன்
அடுத்து நம்மை வரவேற்றது கொரியன் வகை உணவுகள். இங்கு கிடைக்கும் ஜப்பானிஷ் ரேமன் புது ஐட்டமாக உள்ளது. சிக்கன் சூப், நுாடுல்ஸ், சிக்கன் கொத்து கைமா, ஆனியன், கார்ன், முட்டை கலவையுடன் தயாரிக்கப்படும் இதில், கொரியாவின் பிரபலமான கிம்ஸி ரைஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. விலை ரூ.200.
99 பிளஸ் தோசைகள்
தோசை பிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் 99க்கும் மேற்பட்ட வெரைட்டி தோசைகள் கிடைக்கின்றன. பன்னீர் கிரஸ், பட்டர், சீஸ் சேர்த்து தயாரிக்கப்படும் பன்னீர் தந்துாரி மாஷ் தோசைக்கு ஏகப்பட்ட டிமான்ட். இதுபோல் பன்னீர், ஸ்வீட் கார்ன், ஆலுமசாலா, ஹாட் டிரிக் தோசையும் டேஸ்ட் தான். இந்த ஸ்டாலுக்கு வந்தால் வகை வகை தோசைகளை ஒரு கை பார்க்கலாம்.
புல்லட் சிக்கன்
ஏ.ஆர். பிரியாணியின் பிரத்யேக தயாரிப்பு புல்லட் சிக்கன். பார்ப்பதற்கு புல்லட் போல நம்மை மிரட்டுவதால் இந்த பெயராம். அதேநேரம் டேஸ்ட்டிலும் நம்மை சும்மா மிரட்டுது போங்க. சிக்கனை கிரஸ் செய்துபெப்பர், சால்ட், குடைமிளகாய் அரைத்து தயாரிக்கப்படும்
இப்புல்லட் சிக்கன் 4 பீஸ் ரூ.80க்கு கிடைக்கிறது.
பீசா பிரியர்களுக்கு பிடிச்ச 'பீசா ஹட்' இங்கு உள்ளது. வெஜ், நான் வெஜ் பீசாக்கள் கிடைக்கின்றன. இந்தாண்டு கண்காட்சியில் சிக்கன் சாசேஜ் பீசா ஸ்பெஷலாம். பால் மூலம் தயாரிக்கப்படும் மொசரல்லா, மைதா, ஆனியன், தக்காளி சாஸ் கலவையுடன் தயாரிக்கப்படும்
இந்த பீசாவும் கண்காட்சிக்கு வருபவர்களை கவர்கிறது. விலை ரூ.170.