'சி.பி.ஐ., விசாரணைக்கு நீதிமன்றம் முடிவெடுக்கும்'
'சி.பி.ஐ., விசாரணைக்கு நீதிமன்றம் முடிவெடுக்கும்'
ADDED : ஜூன் 27, 2024 06:59 AM

சென்னை : ம.பொ.சி., பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள அவரின் சிலைக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று மாலை அணிவித்தார்.
பின், அவர் அளித்த பேட்டி: கள்ளச்சாராயம் உயிரிழப்பு விவகாரத்தில், சி.பி.ஐ., விசாரணை தொடர்பாக, நீதிமன்றம் முடிவு எடுக்கலாம். இதற்காக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட கோரி, பா.ஜ., சார்பில், மத்திய உள்துறை அமைச்சகத்திலும், கவர்னரிடமும் வலியுறுத்தப்பட்டது.
முன்னாள் பிரதமர் இந்திரா நெருக்கடி நிலையை அமல்படுத்தி தவறு செய்யும்போது, அவரை மக்கள் வெளியே அனுப்பினர். தமிழகத்தில் தி.மு.க., தவறு செய்யும்போது, மக்கள் முடிவு எடுப்பர். கள்ளச்சாராயம் விற்பனை, சட்டம் - ஒழுங்கு மோசம் என, அனைத்தையும் மக்கள் பார்த்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
அவரது அறிக்கை:
அ.தி.மு.க., ஆட்சியில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக அமைக்கப்பட்ட குலசேகரன் ஆணையத்திற்கு, தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஆறு மாதங்கள் நீட்டிப்பு வழங்கப்படவில்லை. தமிழகத்தில் மாநில அரசே ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி இருக்கலாம்.
ஏன் கால நீட்டிப்பு வழங்கப்படவில்லை என்பதை தமிழக மக்களுக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும் விளக்க வேண்டிய கடமை முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது.
கடந்த 2011ல் சமூக பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு, மாநில அரசுகள் வாயிலாக, ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்டது என்பதை முதல்வருக்கு தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.