சென்னை - புதுச்சேரி உட்பட 11 ரயில் சேவைகளில் மாற்றம்
சென்னை - புதுச்சேரி உட்பட 11 ரயில் சேவைகளில் மாற்றம்
ADDED : ஆக 20, 2024 02:06 AM

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரத்தில் ரயில் பாதை மற்றும் நடைமேம்பாலம் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன.இதனால், இந்த தடத்தில் செல்ல வேண்டிய சில ரயில்களின் சேவை யில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3 ரயில்கள் ரத்து
l புதுச்சேரி - விழுப்புரம் காலை 8:05 மணி, விழுப்புரம் - புதுச்சேரி மாலை 5:50 மணி, திருவாரூர் - விழுப்புரம் காலை 5:10 மணி பயணியர் ரயில்கள், செப்., 1ம் தேதி ரத்து செய்யப்படுகின்றன
ஒரு பகுதி ரத்து
l ஆந்திர மாநிலம் காக்கிநாடா போர்ட் - புதுச்சேரி மதியம் 2:30 மணி ரயில், செப்., 1ம் தேதி செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்
l காச்சிகுடா - புதுச்சேரி மாலை 5:00 மணி விரைவு ரயில், செப்., 1ல் செங்கல்பட்டு வரை மட்டுமே செல்லும்
l ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதி - மன்னார்குடி மாலை 4:10 மணி விரைவு ரயில், வரும் 29ம் தேதி விழுப்புரம் வரை மட்டுமே செல்லும்
l எழும்பூர் - புதுச்சேரி காலை 6:35 மணி ரயில், வரும் 31, செப்., 1ம் தேதிகளில் முண்டியம்பாக்கம் வரை மட்டுமே செல்லும்
l திண்டுக்கல் - விழுப்புரம் காலை 5:00 மணி ரயில், வரும் 31, செப்., 2ம் தேதியில் விருத்தாசலம் வரை மட்டுமே இயக்கப்படும்
l திருப்பதி - புதுச்சேரி காலை 4:00 மணி ரயில், வரும் 31, செப்., 2ம் தேதிகளில், விக்கிரவாண்டி - விழுப்புரம் இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்படும்
l காட்பாடி - விழுப்புரம் காலை 5:15 மற்றும் 6:45 மணி ரயில்கள், செப்., 1ம் தேதி வெங்கடேசபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்
l புதுச்சேரி - தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா, புதுச்சேரி - காக்கிநாடா போர்ட் விரைவு ரயில்கள், செப்., 2ம் தேதி செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.