ADDED : ஆக 20, 2024 07:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனில் பராமரிப்பு பணிகள் காரணமாக, திண்டுக்கல்லில் இருந்து ஆக. 31, செப். 2 தேதிகளில் அதிகாலை 5:00 மணிக்கு புறப்படும் திண்டுக்கல் -- விழுப்புரம் விரைவு ரயில் (16868) விருத்தாச்சலம் வரை மட்டுமே இயக்கப்படும்.
விழுப்புரத்தில் இருந்து அதே தேதிகளில் மாலை 4:50க்கு புறப்பட வேண்டிய விழுப்புரம் -- திண்டுக்கல் விரைவு ரயில் (16867) விழுப்புரம் -- விருத்தாச்சலம் இடையே ரத்து செய்யப்பட்டு விருத்தாச்சலத்தில் இருந்து மாலை 5:50 மணிக்கு புறப்படும்.

