ADDED : மே 03, 2024 10:07 PM
சென்னை:தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கர்நாடக மாநிலம் மங்களூரு சந்திப்பில், ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், இந்த தடத்தில் செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மங்களூரு சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் இரவு 11:45 மணி வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில், வரும் 7, 10, 21, 24, 28 ஜூன் 4, 7ம் தேதிகளில், மங்களூரில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள உல்லாளில் இருந்து புறப்படும்
மங்களூரு சென்ட்ரல் - கோழிக்கோடு காலை 5:15 மணி விரைவு ரயில், வரும் 8, 11, 22, 25, 29, ஜூன் 5, 8ம் தேதிகளில் உல்லாளில் இருந்து இயக்கப்படும்
மங்களூரு சென்ட்ரல் - நாகர்கோவில் பரசு ராம் விரைவு ரயில், மே 3, 5ம் தேதிகளில் மங்களூரில் இருந்து, 30 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்
இதே ரயில், வரும் 7, 11, 22, 25, 29, ஜூன், 5, 8ம் தேதிகளில் மங்களூரில் இருந்து, ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.