உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 10, 2026 11:47 PM
அ நிறம் | அளவு
சென்னை: டி.எஸ்.பி.,க்கள், நான்கு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மதுரை அண்ணா நகர் உதவி கமிஷனராக பணிபுரிந்து, தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள சிவசக்தி, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
மதுரை திருமங்கலம் உதவி கமிஷனர் சசிபிரியா, திருப்பூர் மாவட்டம், காங்கேயம் டி.எஸ்.பி.,யாகவும், துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து, தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஜெகநாதன், மதுரை திருப்பரங்குன்றம் உதவி கமிஷனராகவும், மதுரை ஆயுதப்படை உதவி கமிஷனர் முத்துராமலிங்கம், ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் பிறப்பித்துள்ளார்.
