சவுக்கு சங்கர் விவகாரம் 'ரெட் பிக்ஸ்' நிர்வாகி கைது
சவுக்கு சங்கர் விவகாரம் 'ரெட் பிக்ஸ்' நிர்வாகி கைது
ADDED : மே 11, 2024 09:36 PM
திருச்சி:போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதுாறு பேசியதாக, 'யு டியூபர்' சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர். தவிர, சங்கரின் செயலுக்கு துாண்டுதலாக இருந்ததாக, சங்கரை பேட்டி எடுத்து, சேனலில் பதிவு செய்த, 'ரெட் பிக்ஸ்' யு டியூப் சேனல் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு, இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்ட ஆலேசானை நடத்திய திருச்சி போலீசாருக்கு, அவர், டில்லியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. திருச்சி எஸ்.பி., வருண்குமார் உத்தரவின்படி, நேற்று முன்தினம் இரவு, தனிப்படை போலீசார் டில்லி பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவில் மனு கொடுக்க சென்ற பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்தனர்.
டில்லியில் கைது செய்யப்பட்ட அவரை, அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இன்று திருச்சிக்கு அழைத்து வர உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.