கஞ்சா வழக்கு ஜாமின் மனு வாபஸ் பெற்றார் சவுக்கு சங்கர்
கஞ்சா வழக்கு ஜாமின் மனு வாபஸ் பெற்றார் சவுக்கு சங்கர்
ADDED : மே 30, 2024 09:56 PM
மதுரை:சென்னை யுடியூபர் சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவர் வாபஸ் பெற்றார்.
தேனி பூதிப்புரத்தில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது காரில் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம்பிரபு ஆகியோர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் போதைப் பொருள் தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் ஜூன் 5 வரை சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. அதே நீதிமன்றத்தில் அவர் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இரண்டுமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று நீதிபதி செங்கமலச்செல்வன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் ஜாமின் மனுவை வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.