சென்னை நிலம் மட்டுமல்ல; ஒவ்வொரு மனிதரின் உயிர்: சென்னை தினத்தில் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை நிலம் மட்டுமல்ல; ஒவ்வொரு மனிதரின் உயிர்: சென்னை தினத்தில் ஸ்டாலின் வாழ்த்து
ADDED : ஆக 22, 2024 10:29 AM

சென்னை: 'சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் கடைக்கோடி கிராமத்தில் இருந்து வருவோர் முதல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், மற்ற நாடுகளில் இருந்து பிழைப்பு தேடி வருவோரையும், சென்னை மாநகரம் அரவணைக்கிறது. இன்று (ஆகஸ்ட் 22) சென்னை தினத்தையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
தாய் சென்னை!
சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது. வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை! இந்தத் தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம்! பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய - எழுதும் நம் சென்னையைக் கொண்டாடுவோம்!. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.