ADDED : ஜூன் 27, 2024 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணியர் விமானம் இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து தினமும் அதிகாலை 3:00 மணிக்கு சென்னை வந்தடையும்.சென்னை விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 4:00 மணிக்கு இலங்கைக்கு செல்லும்.
மதியம் 2:10 மணிக்கு சென்னைக்கு வரும் ஸ்ரீலங்கன் விமானம் இங்கிருந்து மாலை 4:05 மணிக்கு இலங்கைக்கு செல்லும்.
இந்த இரு பயணியர் சேவையும், அதாவது 2 வருகை, 2 புறப்பாடு என நான்கு விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் திடீரென ரத்து செய்தது.
இதனால் இலங்கைக்கு செல்லும் பயணியர் மட்டுமின்றி ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேஷியா, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் டிரான்சிட் பயணியரும் பாதிக்கப்பட்டனர். நிர்வாக காரணங்களுக்காக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.