திறமையை கண்டு செஸ் உலகமே வியந்து நிற்கிறது: பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
திறமையை கண்டு செஸ் உலகமே வியந்து நிற்கிறது: பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
ADDED : ஜூன் 02, 2024 11:34 AM

சென்னை: நார்வே செஸ் போட்டியில் உலகின் முதல் இரண்டு வீரர்களான கார்ல்சன், பேபியானோ கருனாவை வென்ற, செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
உலகின் நம்பர் 1 மற்றும் 2ம் இடத்தில் இருக்கும் வீரர்களை அடுத்தடுத்து தோற்கடித்து டாப் 10 வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நார்வே செஸ் தொடரில் முற்றிலும் வியத்தகு ஆட்டத்தை இளம் வீரர் பிரக்ஞானந்தா வெளிப்படுத்தியுள்ளார்.
3ம் சுற்றில் உலகின் முதல் நிலை ஆட்டக்காரரான மேக்னஸ் கார்ல்சனை வென்றதோடு, தற்போது ஐந்தாம் சுற்றில், உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான பேபியானோ கருவானாவையும் வீழ்த்தியிருப்பதென்பது மிகப்பெரும் சாதனையாகும்.
டாப்-10 தரவரிசைக்குள் நுழைந்திருக்கும் உங்கள் வரவு நல்வரவாகட்டும். பிரக்ஞானந்தா! ஒட்டுமொத்த செஸ் உலகமும் உங்களின் திறனையும் சாமர்த்தியத்தையும் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளது'' எனக் கூறப்பட்டுள்ளது.