ADDED : மே 03, 2024 01:34 AM
கொடைக்கானல்:ஓய்வெடுப்பதற்காக குடும்பத்தினருடன் கொடைக்கானல் சென்ற முதல்வர் ஸ்டாலின், இன்று சென்னை திரும்புகிறார்.
முதல்வர் ஸ்டாலின், ஏப்., 29ல் குடும்பத்தினருடன், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சென்றார். தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுத்து வந்தார்.
அந்த விடுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார்; பசுமை பள்ளத்தாக்கு அருகே 'கோல்ப்' விளையாடி மகிழ்ந்தார். நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்ய திட்டமிட்டு இருந்தார். அங்கு, சுற்றுலா பயணியர் வருகை அதிகமாக இருப்பதால், படகு சவாரி திட்டம் கைவிடப்பட்டது.
முதல்வரின் மனைவி துர்கா நேற்று காலை, 11:30 மணிக்கு கொடைக்கானலில் உள்ள குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் வாசலில் கூடி இருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து அங்கிருந்து சலேத்மாதா சர்ச் சென்று அங்கு நடந்த பிரார்த்தனையில் பங்கேற்றார்.
முதல்வர் ஸ்டாலின், கொடைக்கானலில் ஐந்து நாள் ஓய்வெடுப்பார்; நாளை வரை அங்கு தங்குவார் என, கூறப்பட்டது. ஆனால், அவர் ஓய்வு நாளை குறைத்துக்கொண்டு, இன்று சென்னை திரும்புகிறார். இதை, அதிகாரிகள் உறுதி செய்தனர்.