ADDED : மே 10, 2024 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதை வரவேற்கிறேன்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் அளித்ததை வரவேற்கிறேன். அநீதிக்கு எதிரான இந்த வெற்றி, நம் மக்களாட்சியை வலிமைப்படுத்தி உள்ளது.
கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளிவருவது, நீதியை அடையாளப்படுத்துவதோடு, இண்டியா கூட்டணியையும் பலப்படுத்தி உள்ளது. தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும் வேகத்தை, இது கூட்டியுள்ளது.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-நமது நிருபர் -