ADDED : ஆக 25, 2024 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்த பெயிண்டரை, போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17வயது சிறுமி பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்தவர் ஜூலை 21ம் தேதி காணாமல் போனார்.
சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், நரசிங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்த தர்மன் மகன் பிரபு,38, என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருவதும், பெயிண்டரான பிரபு, சிறுமியின் கிராமத்திற்கு வேலைக்கு சென்றபோது, இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார், சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பினர். பின்னர் ஏற்கனவே பதிவு செய்த வழக்கை குழந்தை திருமணம் மற்றும் போக்சோ பிரிவில் மாற்றி பிரபுவை கைது செய்தனர்.