கவர்னரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்கிறார்; தங்கம் தென்னரசு பேட்டி
கவர்னரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்கிறார்; தங்கம் தென்னரசு பேட்டி
ADDED : ஆக 15, 2024 11:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: இன்று மாலை கவர்னரின் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
நிருபர்கள் சந்திப்பில், தங்கம் தென்னரசு கூறியதாவது: இன்று மாலை கவர்னர் வழங்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். கவர்னரின் அழைப்பை ஏற்று கலந்து கொள்ள உள்ளோம். கவர்னர் பொறுப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் தேநீர் விருந்தில் அரசு சார்பில் பங்கேற்கிறோம். அரசியல் கருத்து என்பது வேறு, அரசின் நிலைப்பாடு என்பது வேறு; கவர்னரின் கருத்தியல் சார்பான விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் தி.மு.க.,விற்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தேநீர் விருந்தை திமுகவின் கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க, வி.சி.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.