முதலீட்டை ஈர்க்க 17 நாட்கள் ஸ்டாலின் அமெரிக்கா சுற்றுப்பயணம்
முதலீட்டை ஈர்க்க 17 நாட்கள் ஸ்டாலின் அமெரிக்கா சுற்றுப்பயணம்
ADDED : ஆக 15, 2024 07:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : முதலீடுகளை ஈர்க்கும் விதமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் 27-ம் தேதி முதல் தொடர்ந்து 17 நாட்கள் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27-ம் தேதி முதல் 17 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின் போது சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ நகரங்களில் உலகின் முன்னணி நிறுவன தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
ஆக.,28 ம் தேதி முதல் செ.,2 -ம் தேதி வரையில் சான்பிரான்சிஸ்கோ நகரில் முன்னணி நிறுவன தலைவர்களை சந்திக்கிறார்
ஆக.,29-ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டார்கள் மாநாட்டில் பேச உள்ளார்.
ஆக.,31-ம் தேதி அமெரி்க்காவில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.